டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ‘செம ஹேப்பி நியூஸ்’.. தலைவர் பிரபாகர் கொடுத்த மாஸ் அப்டேட்..!!

Spread the love

தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த தற்போது வெளியாகி உள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று மனிதவளத்துறை கூறியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி, 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படியே அனைத்துப் போட்டித் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும். மேலும், புதிய பணியிடங்கள் அரசுத் துறைகளில் இருந்து வரும் பட்சத்தில், அவை பிற்சேர்க்கை அறிவிப்பு மூலம் உடனுக்குடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.இந்த ஆண்டின் முதல் அறிவிப்பாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மே 20-ம் தேதி வெளியிடப்பட்டு, தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 23-ம் தேதி வெளியாகும்.

அதில் காலிப்பணியிடங்கள் மற்றும் பதவிகள் குறித்த முழு விவரங்களும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இவை தகுதி மற்றும் பதவி நிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த குரூப்-2 அல்லது குரூப்-2ஏ தேர்வுகளில் சேர்க்கப்படும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தில காலியாக உள்ள 15,000 பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே படிப்படியாக நிரப்பப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பல வருடங்களாகப் படித்து எழுதும் குரூப் தேர்வுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. உதாரணமாக, 14 லட்சம் பேர் எழுதும் குரூப்-4 தேர்வுக்கு வெறும் 5,000 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவது தேர்வர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தி வந்தது. இந்தச் சூழலில், மின்சார வாரிய இடங்கள் மற்றும் பல்கலைக்கழக இடங்கள் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதோடு, இது அறிவிப்பிலும் உண்மையாக எதிரொலிக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Muthu Mani

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago