இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 65 வயது பாட்டியை 25 வயது பேரன்பாலியில் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த பிறகு அந்த மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி மதியம் தனது பேரன் வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் சில நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் பேரனால் தனக்கு அச்சுறுத்தல் வந்ததால் இவர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். ஆறு வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தினம் தோறும் நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதுவும் சொந்த பேரனால் பாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
