இனி இதற்கும் ஆதார் கார்டு கட்டாயம்.. இல்லனா பணம் கிடைக்காது.. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தில் பயனாளிகள் போக்குவரத்து படி, தங்குமிட படி உள்ளிட்ட பண பலன்களைப் பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதாருக்கு விண்ணப்பித்த ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆதார் கார்டு இல்லாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வசதியாக ஆங்காங்கே ஆதார் பதிவு முகாம்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள் போன்றவை மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம் என்று அரசு விளக்கமளித்துள்ளது.