நெஞ்சில் பாய்ந்த தோட்டா…! நாடகமாடிய 83 வயது தாத்தா… முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினரின் மகன் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பிரபல சுற்றுலாத் தலமான லோனாவாலா பூஷி கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் மோதிராம்’ வளாகத்தில், அக்டோபர் 5 அன்று முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் மணிக் மரத்தேயின் மகன் அபய் மரத்தே (31) நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உரிமம் பெற்ற துப்பாக்கியைச் சுத்தம் செய்யும்போது தவறுதலாக வெடித்ததில் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்டத்தில் கூறப்பட்டது.

ஆனால், புனே கிராமப்புறக் குற்றப்பிரிவு மற்றும் லோனாவாலா நகர போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்தவர்களின் வாக்குமூலங்களில் கடும் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. நிலம் மற்றும் நிதித் தகராறு காரணமாக, அபய்யின் 83 வயது தாத்தா மோதிராம் மரத்தே என்பவரே அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அம்பலமானது. இதையடுத்து நாடகமாட முயன்ற தாத்தா மோதிராம் மரத்தேயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.