மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது சொந்த தாத்தாவை கிரிக்கெட் பேட் வைத்துத் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த முதியவர் ஓய்வுபெற்ற மாநில ஆயுதப்படை வீரர் ஆவார். சம்பவத்தன்று வீட்டில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், படுகாயமடைந்த அவரை மீட்டு அரவிந்தோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது தாத்தா பலமுறை தன்னிடம் தவறாகவும் தகாத முறையிலும் நடந்துகொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே தாக்குதல் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
