கான்பூர், கிட்வாய் நகரின் நிராலநகர் பகுதியில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த சந்தீப் சிங், தனது சொந்த ரிவால்வரால் சுட்டுக்கொண்டு திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் மனைவியுடனான தொடர் தகராறு காரணமாகவே அவர் இந்த தீவிர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
https://twitter.com/ibne_zaidi/status/2107032299661611195/video/1
தற்கொலை செய்துகொண்ட சந்தீப் சிங்கின் மனைவியும் கான்பூர் தேஹாத் பகுதியில் பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
