“பாட்டி நீ இங்க தான் இருக்கியா.?” முதியோர் இல்லத்தில் பாட்டியை எதேர்சையாக கண்ட பேத்தி… கட்டியணைத்து அழுத காட்சி… இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம் வைரல்…!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

தனது பாட்டி வெளியூர் சென்றுவிட்டதாகத் தந்தை சொன்னதை நம்பியிருந்த ஒரு சிறுமி, பள்ளிச் சுற்றுலா சென்ற இடத்தில் தன் பாட்டி முதியோர் இல்லத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அழுத தருணம் அனைவரையும் கலங்க வைத்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பழைய செய்தி என்றாலும் தற்போது வைரலாகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஜிஎன்சி பள்ளி மாணவர்கள் அகமதாபாத் கோடாசரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ஒரு களப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வைப் புகைப்படம் எடுக்கச் சென்ற கல்பேஷ் பாச்சேச் என்பவரின் கேமராவில், எவராலும் மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சியான தருணம் பதிவானது. மாணவர்கள் முதியவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுக்கத் தயாரானபோது, ஒரு சிறுமி திடீரெனக் கத்திக்கொண்டே ஓடிச்சென்று அங்கிருந்த ஒரு மூதாட்டியைக் கட்டியணைத்து அழுதார்.

விசாரணையில், அந்த மூதாட்டி அச்சிறுமியின் சொந்தப் பாட்டி என்பது தெரியவந்தது. பாட்டி வெளியூருக்குச் சென்றுவிட்டதாகத் தந்தை கூறியதை நம்பியிருந்த அந்தச் சிறுமிக்கு, அவர் முதியோர் இல்லத்தில் விடப்பட்டது அப்போதுதான் தெரியவந்தது. புகைப்படக் கலைஞர் கல்பேஷ் இதனைப் பற்றிப் பகிர்கையில், அந்தச் சிறுமியும் பாட்டியும் ஒருவரையொருவர் கட்டியணைத்து அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார்.