சமூக வளைதளத்தில் இன்ஸ்டாகிராமே முதலிடத்தில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் பேமஸான பலரும் உள்ளனர். பாலோவர்கள் கொஞ்சம் ஏறி விட்டாலே அவர்களுக்கு எல்லாம் பெரிய செலிபிரிட்டின்னு நெனப்பு. அப்படி பேமஸ் ஆனவர் தான் திவாகர். இவர், கோமாளித்தனமான வீடியோக்களை போட்டு பேமஸ் ஆனவர். சமீபத்தில் கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் போது ஒரு காட்சி வருமே அந்த காட்சியை ரீமேக் செய்து போட்டு வைரலானவர். அதைத் தொடர்ந்து தனுஷ், சிவாஜி கணேசன் இது போன்ற பெரிய நடிகர்களின் வீடியோக்களை போட்டு வந்துள்ளார். இதுபோன்ற சில வீடியோவினால் பேமஸான இவர் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஏஸ் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் யூட்யூபில் வரும் அனைத்து சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். கலாட்டா யூடியூப் சேனலில் பேட்டியளிக்க சென்ற இவர் பாதியிலே வெளியேறி விட்டார். காரணம் தொகுப்பாளர் கேட்ட சில கேள்விகள் இவரை கடுப்பாக்கியுள்ளது. இது மட்டும் இன்றி இவர் சமீபத்தில் சாதியைப் பற்றி வீடியோ வெளியிட்டுயிருந்தார் . இப்படி பல சர்ச்சைகளில் தொடர்ச்சியாக திவாகர் சிக்கிக் கொண்டு உள்ளார். பிக் பாஸில் கலந்து கொண்ட ஜி.பி. முத்துவை லோ க்ளாஸ் (low class)என்றும் ஒரு பேட்டியில் திவாகர் கூறியிருந்தார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜ.பி. முத்து பதிலடி கொடுக்கும் விதமாக யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நான் வாட்டர் மிலன் திவாகரை பற்றி திட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். காரணம் அவர் ஒரு பேட்டியில் சூரி அண்ணாவைப் பற்றி பேசி இருந்தார். நான் சூரியை போல் சில்ட்ர காசுக்கெல்லாம் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த விஷயம் எனக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கியிருந்தது. அதனால் தான் திட்டி வீடியோ வெளியிட்டு இருந்தேன். சூரி அண்ணா எவ்வளவு தங்கமான மனிதன் தெரியுமா. அவரைப் பற்றி அவன் பேசியது எனக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. அவர் ஒரு முறை என்னை சந்தித்தபோது ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். நான், உங்களுடைய பெரிய ரசிகன் என்றும் கூறினார். எனக்கு அவர் கூறியது நெகிழ்ச்சியை உண்டாக்கியது. அவர் மிகவும் தங்கமான மனிதன் என்று பேட்டி அளித்துள்ளார் ஜி.பி முத்து. சுதாகரை மட்டும் நான் நேரில் பார்த்தால் செருப்பாலே அடிப்பேன் என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…