புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில் இரண்டு கிலோ சர்க்கரை, இரண்டு கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப்பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என ஐந்து பொருள்கள் கொடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
