சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன்..? “மைக் ஆப் செய்யப்பட்டது” ஆளுநர் மாளிகை பரபரப்பு அறிக்கை..!!

By Soundarya on தை 20, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 20, 2026) வெளியேறிய விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து 13 முக்கியக் குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் முறையாகப் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர் பேச முயன்றபோது பலமுறை மைக் அணைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு தரவுகளுக்கு முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை விளக்க உரையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் சட்டப்பேரவை மரபு மீறல்கள் உள்ளிட்ட 13 காரணங்களை முன்வைத்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.