அடடே சூப்பர்..! பழங்குடியின இளைஞர்களோடு நடனமாடிய ஆளுநர் ஆர்.என் ரவி.. வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love
சென்னையில் “மை பாரத் நேரு யுவகேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த 16வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி ஆனது இன்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பாக பழங்குடியின இளைஞர்களை வேறு மாநிலங்களுக்கு அழைத்து சென்று அந்த மாநில கலாச்சாரங்களை கற்பிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் ,மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 240 பழங்குடி இளைஞர்கள் தமிழகம் வந்துள்ளார்கள்.
இவர்களை கவர்னர்  ஆர்.என்  ரவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் RN ரவி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பழங்குடியினர் இளைஞர்களுடன் கவர்னர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். நாகாலாந்து கவர்னராக பணியாற்றிய அனுபவம் உள்ளதால், பழங்குடியின இளைஞர்களுடன் அவர் எளிதாக பழகியதாகவும் கூறப்படுகிறது.