BREAKING: “ராஜ் பவன்” அல்ல, இனி “மக்கள் பவன்”…. சற்றுமுன் அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விடுத்த கோரிக்கையை தொடர்ந்து ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநர் மாளிகைகள் ராஜ் பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டின் தலைமை ஏற்ற ஆளுநர் ராஜ் பவன் என்பது மக்கள் பவன் என மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக ராஜ் பவன் என்பதை இனி மக்கள் பவன் என்று அனைத்து மாநிலங்களும் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது.