முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தேர்வு எழுதியவர்களில் 85 ஆயிரம் பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பிஎச்டி, 5 பட்டங்கள் பெற்றவர்கள் கூட 20 மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளன. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
