“அரசு நிர்வாகத்தில் ஜோதிடத்தின் பங்கு என்ன?” இவருக்கெல்லாம் பதவியா..? தவெக அரசுக்கு வந்த புதிய சிக்கல்.. கிளப்பிய சர்ச்சை..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருப்பதை எம்பி சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசு நிர்வாகத்தில் ஜோதிடத்தின் பங்கு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒருவரின் தனிப்பட்ட மத மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் அரசுப் பதவிகளை வழங்குவது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவதோ அல்லது பதவிகள் வழங்கப்படுவதோ முறையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நியமனம் குறித்து சசிகாந்த் செந்தில் எழுப்பியுள்ள தர்க்கரீதியான கேள்விகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.