தகவல் தொழில்நுட்பத் துறையில் அரசு வேலை!… 243 பணியிடங்கள்… ₹1.77 லட்சம் வரை சம்பளம்.. ஏப்ரல் 24 கடைசி… உடனே முந்துங்கள்…!!

By Muthu Mani on சித்திரை 11, 2026

Spread the love

தேசிய தகவலியல் மையத்தில் (NIC) ‘சைன்டிஸ்ட்’ (Scientist) பிரிவில் காலியாக உள்ள 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க பி.இ அல்லது பி.டெக் (B.E/B.Tech) முடித்திருக்க வேண்டும். மேலும், கேட் (GATE) தேர்வில் பெற்ற தகுதி மதிப்பெண்கள் அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பிற்கு 30 வயதுக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் https://recruitment.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை அரசு விதிகளின்படி மிகச்சிறந்த ஊதியம் வழங்கப்படும். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியில் சேர விரும்பும் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாகும்.