தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலையானது குவிண்டாலுக்கு ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என இன்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இனி சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545-க்கு கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர்.
