விநாயகர் சிலை ஊர்வலத்தில் மக்களோடு மக்களாக குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ .. இணையத்தை கலக்கும் வீடியோ .!

By Srimathi on ஆவணி 30, 2025

Spread the love

சேலம் சித்தனுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் அருள் கலந்து கொண்டார். பனங்காடு மக்களை சந்திப்பதற்காக சேலதாம்பட்டி கிராம வழியாக சென்ற பொழுது, அந்த ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.

கிராம மக்கள் எம்எல்ஏ பார்த்தவுடன், அவரை விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைத்தனர். மேலும் ஊர் மக்களின் வேண்டுதல் படி, எம்எல்ஏவும் விழாவில் கலந்து கொண்டார். மேலும் அந்த ஊர் மக்கள் எம்எல்ஏவை நடனமாடும் படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோள் படி எம்எல்ஏவும் அவர்களுடன் நடனமாடி சிறிது தூரம் சென்றார். பின் விநாயகரை வழிபட்ட எம்எல்ஏ கிராம மக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.