மெர்சர் (Mercer) நிறுவனம் நடத்திய ‘மொத்த ஊதியம்’ குறித்த சமீபத்திய ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் ஊழியர்களின் சராசரி சம்பளம் 2025-ஆம் ஆண்டில் 9% வரை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒரு சராசரி ஊழியரின் மாதச் சம்பளம் ரூ. 18,000 முதல் ரூ. 28,000 வரை உள்ளது. சம்பள உயர்வு என்பது முக்கியமாக மூன்று காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. அதாவது,ஊழியரின் தனிப்பட்ட செயல்திறன் (Individual Performance).நாட்டின் தற்போதைய பணவீக்கம் (Inflation). வேலை சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் சம்பளத்தை உயர்த்துதல்.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் வலுவான உள்நாட்டுத் தேவைகளால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த 9% உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்களின் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள இத்தகைய ஊதிய உயர்வை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
