சான்ஸ் ஆய்வகங்கள் (Reliance/Strand Life Sciences) மரபணு பரிசோதனையை (Genome Sequencing) வெறும் ₹1,000 என்ற குறைந்த விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளது மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. பொதுவாக மரபணு பரிசோதனை செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில், ரிலையன்ஸ் இதனை சாதாரண மக்களும் அணுகும் வகையில் ரூ.1,000-க்கு வழங்குகிறது. ஒரு நபரின் மரபணு அமைப்பை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு (Diabetes) போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே அறிய முடியும்.
டும்பத்தில் ஒருவருக்கு இருக்கும் மரபணு குறைபாடுகள் அடுத்த தலைமுறைக்குச் செல்லாமல் தடுக்க இந்த சோதனை உதவும். ஒவ்வொருவரின் உடலுக்கும் எந்த வகையான மருந்து மற்றும் சிகிச்சை சிறப்பாகச் செயல்படும் என்பதை இந்த முடிவுகள் மூலம் மருத்துவர்கள் தீர்மானிக்கலாம். மரபணு ரீதியாக உங்களுக்கு எந்த வகை உணவுகள் அல்லது உடற்பயிற்சிகள் தேவை என்பதை அறிந்து உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கலாம். ரிலையன்ஸ் குழுமத்தின் இந்த முன்னெடுப்பு, இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
