“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஸியான சாலையில் காரை நிறுத்தியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவில், அந்தப் பெண் தனது அதிகாரம் மற்றும் வருமானம் குறித்துப் பெருமையாகப் பேசுவதைக் காண முடிகிறது. காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது, “நான் ஒரு அரசு ஊழியர், எனக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது” என்று கூச்சலிட்டதுடன், அங்கிருந்தவர்களை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். அவரது இந்த அடாவடியான செயலால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

   

   

மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அந்தப் பெண் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்தைத் தடுத்தது மற்றும் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.