ஹைதராபாத் அப்துல்லாபூர்மேட் அருகிலுள்ள பாட்டாசிங்காரத்தில், அதிவேகமாக வந்த தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் ஓரத்தில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில், பிரதான சாலையில் இருந்து விலகி வேகமாக வரும் பேருந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் ஆட்டோ மீது மோதி, எரிபொருள் விநியோக இயந்திரங்கள் மீது பலமாக மோதுவது பதிவாகியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2098002971426738576/video/1
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவிலான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பெட்ரோல் பங்க் உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. நல்வாய்ப்பாக எரிபொருள் கசிவு எதுவும் ஏற்படாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
