“ராகுல் காந்தி தான் PM வேட்பாளர்”… கூட்டணிக்குள் குண்டைத் தூக்கி போட்ட காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்… CM விஜய் அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றும், போராட்டமும் தியாகமும் நிறைந்த அவருக்கு அந்தத் தகுதி முழுமையாக உள்ளது என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சராகத் தாம் இதை வெளிப்படையாக அறிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து தவறாகக் கணிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜயே அறிவிப்பார் அல்லது அறிவிக்கக்கூடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 140 ஆண்டுகால பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக, ராகுல் காந்தியைப் பிரதமராகப் பார்ப்பதே தங்களின் ஒரே இலக்கு என்றும், அதற்காகத் தங்களது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், தங்களின் கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

   

எதிர்வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று உறுதியளித்த விஸ்வநாதன், அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜயின் செல்வாக்கு உச்சத்தில் தான் இருக்கும் என்றார். விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் பிரச்சினைகளில் அரசு எப்போதும் தீவிர கவனம் செலுத்தும் என்றும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெளிவுபடுத்தினார். அமலாக்கத்துறையின் வழக்குகள் குறித்துப் பேசுகையில், சட்டமன்ற வரலாற்றிலேயே முதலமைச்சரின் பதிலுரை மிக முக்கியமானது என்றும், சவையில் பேச அவருக்கு முழு உரிமையும் அதிகாரமும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

   

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இதுகுறித்துத் தயக்கம் காட்டுவதாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு கட்சியும் தங்களது தலைவரைப் பிரதமர் வேட்பாளராக முன்வைப்பதில் தவறில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ராகுல் காந்தியை மையப்படுத்தியே உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் போராட்ட வாழ்க்கை உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்ட அவர், 2029 தேர்தலில் ராகுல் காந்தி இந்தியப் பிரதமராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.