ஆண்கள் தினத்திற்கும், கவுண்டமணியின் இந்த காட்சிக்கும் என்ன சம்பந்தம்?.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்கள் முதல் நடிக்க தொடங்கியவர் தான் கவுண்டமணி. இவர் பதினாறு வயதிலேயே மற்றும் கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் இவர் முன்னணி காமெடி நடிகர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 85 முதல் 20 ஆண்டுகள் இவர்களின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை.

   

செந்திலோடு இணைந்து மட்டுமல்லாமல் கவுண்டமணி தனியாகவும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய முதல் திரைப்படமான கன்னி ராசி திரைப்படத்தில் பிரபு மற்றும் ரேவதி ஜோடியாக நடித்திருந்த நிலையில் ரேவதியின் அப்பாவாக கவுண்டமணி நடித்திருந்தார். இந்த வீட்டில உனக்கு மரியாதை இல்ல, நானே உனக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று சொல்லி வீட்டில் இருக்கும் அவரின் போட்டோவுக்கு கவுண்டமணி மாலை போட்டு விடுவார்.

அப்போது ஊரில் இருந்து வரும் பிரபு இதனை பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுவார். இந்த காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் தற்போது ஆண்கள் தினம் வந்தாலே பெரும்பாலான ஆண்கள் கவுண்டமணி அவருக்கு மாலை போட்டு விடும் அந்த புகைப்படத்தை மீம்ஸ் ஆக பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆண்களுக்கு வீட்டில் மரியாதையே இல்லாத போது எதற்கு ஆண்கள் தினம் என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்த காட்சி தொடர்பாக பாண்டியராஜன் அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு அவருடைய போட்டோவுக்கு அவரே மாலை போட்டு விடுவார். அவரின் போட்டோவுக்கு முன்பு மெழுகுவர்த்தி பத்த வைப்பார். அதனைப் பார்த்து தான் கவுண்டமணிக்கு அந்த காட்சியை வைத்தேன். இது இத்தனை வருடங்கள் கழித்தும் மீம்ஸ் ஆக வரும் என்று அப்போது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று பாண்டியராஜ் கூறியுள்ளார்.

author avatar
Nanthini