கவுண்டமணி சொட்டை என்று ரிஜெக்ட் செய்த பாரதிராஜா.. படத்தில் நடிக்க வைக்க பாக்யராஜ் செய்த ராஜதந்திரம்..!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கொண்டாடப்படும் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். உதவி இயக்குனராக இருந்தபோது பாக்கியராஜ் நடிகர் கவுண்டமணியை பாரதிராஜா திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைத்துள்ளார். அதாவது கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க பாக்யராஜ் படாத பாடு பட்டு உள்ளார். அதாவது கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்கலாம் என்று சொன்னதும் பாரதிராஜா , யோ அந்த ஆள் நடிப்பு என்னையா, எனக்கு என்னவோ மாதிரி இருக்குயா, நாடக நடிகர் மாதிரி, என்ன நடிக்கிறார், வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கவுண்டமணியை நடுசாமத்தில் அழுகவிட்ட பாக்யராஜ்... அடடடா! இதற்கு தானா?

   

அந்த கேரக்டருக்கு பாரதிராஜா டெல்லி கணேசன் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் இல்லவே இல்லை அது சரியா வராது சார், அவர் கொஞ்சம் மெஜஸ்டிக்கான லுக்கில் இருக்காரு அவர் கிராமத்து ஆளுக்கு எப்படி கரெக்டா இருப்பாரு, அதனால கவுண்டமணியை போட்டுக்கலாம் என்று பாக்கியராஜ் கூறியுள்ளார். உடனே பாரதிராஜா கவுண்டமணி சொட்ட தலையாக இருக்கிறார் என்று கூறியதும் ஒரு விக் ரெடி பண்ணி அவருக்கு டெஸ்ட் எடுத்துட்டு வருவோம் என்று பாக்கியராஜ் சொல்லி உள்ளார்.

   

அவரு என்னய்யா நடிகரு...' பாரதிராஜாவுக்கே பிடிக்காமல் அவரது படத்தில் நுழைந்த கவுண்டமணி: நடந்தது இதுதான்!

 

பிறகு கவுண்டமணிக்கு டயலாக் கொடுத்து டெஸ்ட் எல்லாம் எடுத்து அதை கொண்டு போய் ஸ்கிரீனிங் செய்து, நைட்டு பத்து மணிக்கு பாரதிராஜாவுக்கு போட்டு காட்டியுள்ளனர். கவுண்டமணி டயலாக் பேசும்போது பாக்கியராஜ், பாலகுரு எல்லாம் சிரிக்கும் போது பாரதிராஜா இவர்களைப் பார்த்து நீங்க எல்லோரும் முடிவு பண்ணிட்டீங்க என்று கூறிவிட்டு தனது படத்தில் கவுண்டமணியை நடிக்க வைப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் என்னையா நடிகர் என்று பாரதிராஜா கூறிய அந்த கவுண்டமணி தான் பின் நாட்களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக உயர்ந்துள்ளார்