கும்பிடு போடாதது ஒரு குத்தமா..? ஷூட்டிங் ஸ்பாட்டில் கவர்ச்சி நடிகையை அசிங்கப்படுத்திய கவுண்டமணி..

By Nanthini on மார்கழி 6, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் கிளாமர் குயின் ஆக கலக்கியவர் தான் நடிகை விசித்ரா. இவர் சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் மறுபடியும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ரா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது விளையாட்டை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் விசித்ராவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பிரபு மற்றும் கனகா ஜோடி சேர்ந்து பெரிய குடும்பம் என்ற திரைப்படத்தில் நடித்தனர். இந்த படத்தில் போஸ்ட் மாஸ்டராக கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

   

அதேசமயம் விசித்ரா பாப்பமா என்ற கிளாமரான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவுண்டமணிக்கும் விசித்ராவுக்கும் ஒரு சில காட்சிகள் இடம் பெற்று இருக்கும். ஆனால் அதில் நடிக்க முடியாது என கே எஸ் ரவிக்குமாரிடம் கவுண்டமணி கூறியுள்ளார். இதற்கான காரணம் மிக வேடிக்கையாக இருந்தது. அதாவது விசித்ரா நடிக்கக்கூடிய படங்களில் சிறிய காமெடி கதாபாத்திரம் கிடைக்கும் என்பதால் படப்பிடிப்புக்கு வந்ததும் தன்னுடைய காட்சி முடிந்து விட்டதும் யாருடனும் பேசாமல் அப்படியே கிளம்பி விடுவார். அப்படிதான் பெரிய குடும்பம் படப்பிடிப்பிலும் இவர் இருந்துள்ளார்.

   

 

ஆனால் கேஎஸ் ரவிக்குமார் அவரை அழைத்து கவுண்டமணியிடம் கூட்டி சென்று வணக்கம் சொல்லுமா என்று கூறியுள்ளார். உடனே விசித்ரா நான் காலையிலயே கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொல்லிட்டேன் என கூறினார். இருந்தா என்ன மறுபடியும் ஒரு முறை வணக்கம் சொல் என கே எஸ் ரவிக்குமார் அவரை வற்புறுத்தியுள்ளார். உடனே விசித்ரா காலை வணக்கம் கூற அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது கிளம்புமா என கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். எப்போதோ ஒருமுறை விசித்ரா கவுண்டமணியிடம் வணக்கம் வைக்கவில்லை. அதனால் இந்த திமிர் பிடித்த பெண்ணுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என ஷூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணி பிரச்சனை செய்துள்ளார். அதன் பிறகு தான் கே எஸ் ரவிக்குமார் இருவரையும் சமாதானப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்து முடித்ததாக கூறப்படுகிறது.