Connect with us

CINEMA

தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல.. உலக அளவில் ட்ரெண்டான தளபதி விஜய்.. லீயோ படத்திற்காக கூகுளே Wait பண்ணுதாம்..!!

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான லியோ படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூரலிகான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

   

ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது முன்னதாக லியோ படத்திலிருந்து வெளியான பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் வைப் செய்ய ஆரம்பித்தனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்சன் காட்சிகள் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆக 6 நாட்களே உள்ள நிலையில் இப்போது இருந்தே ஒவ்வொரு நாளும் புது, புது அப்டேட் மற்றும் கொண்டாட்டங்களுடன் நகர்ந்து செல்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பகிர்வை பகிர்ந்துள்ளது. அதில் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து I Am Waiting என்று பதிவிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தங்களது Google translate tool- ஐ புரமோட் செய்யும் விதமாக இவ்வாறு பதிவிட்டுள்ளது. லியோ படத்திற்காக கூகுளே காத்திருக்கும் இந்த பதிவு உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top