மகளிர் உரிமைத்தொகை ரூ.2000… தமிழக அரசு சூப்பர் அப்டேட்… இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

தமிழகத்தில் தற்பொழுது சுமார் 1.31 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண்கள் சிலர், தங்களுக்கு தகுதி இருந்தும் இந்தத் தொகை கிடைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தகுதியுள்ள நபர்களுக்கு முறையாக உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதிக்கு பிறகு விரிவாகப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இதன் மூலம் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.