ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீட்டிப்பு.. தவெக ஆட்சி அமைந்தவுடன்.. கோவையில் அடுத்த அதிரடி..! பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘மாஸ்’ அப்டேட்…!!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

இந்தியாவில் வேகமாக முன்னேறி வரும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோயம்புத்தூர் முதன்மையாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி, தொழில், மருத்துவம், ஐ.டி மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் சிறப்பான வளர்ச்சியை எட்டி வரும் கோவையின் மக்கள் தொகை 30 லட்சத்தை நெருங்குகிறது. இத்தகைய அசுர வளர்ச்சிக்கு ஏற்ப நகரின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படாததால், அனைத்துப் பிரதான சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைச் சமாளிக்க காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோவையின் இதயப் பகுதியாக விளங்கும் அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்குத் தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலமான ‘ஜி.டி. நாயுடு மேம்பாலம்’ கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. எனினும், அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் விமான நிலையப் போக்குவரத்து காரணமாக நெரிசல் முழுமையாகக் குறையவில்லை. இதைக் கட்டுப்படுத்த, கோல்டுவின்ஸ் பகுதி முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு இந்த மேம்பாலத்தை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான மண் பரிசோதனை மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் முடிந்த நிலையிலும், மெட்ரோ ரயில் திட்டக் காரணங்களால் இத்திட்டம் தற்காலிகமாகக் காத்திருப்பில் வைக்கப்பட்டது.

   

தற்போது அவிநாசி சாலை மேம்பால நீட்டிப்புத் திட்டத்திற்குச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்கியுள்ளதால் இதற்கான தடை விலகியுள்ளது. மேம்பாலத்தால் மெட்ரோ திட்டத்திற்குப் பாதிப்பில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அதற்கேற்ப மெட்ரோ வடிவமைப்பை மாற்றிக்கொள்ளச் சம்மதித்துள்ளனர். விரைவில் தொடங்கவுள்ள இப்பணிகள் மூலம், தற்போதைய பாலத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளியில், போக்குவரத்துத் தேவைக்கேற்ப ஏறு-இறங்கு தளங்களுடன் ரூ.700 முதல் ரூ.800 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. தவெக ஆட்சியமைந்தவுடன் கிடைத்துள்ள இந்த அறிவிப்பு கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.