500 வருஷத்துக்கு அப்புறம் ஒரு அதிசயம்…! பிப்ரவரியில் பிறக்கப்போகும் 5 ராஜயோகங்கள்…! இந்த ராசிக்காரர்களுக்கு மெகா ஜாக்பாட்…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

ஜோதிட சாஸ்திரப்படி வரும் பிப்ரவரி 2026-ல் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஒரு அபூர்வ நிகழ்வு நடக்கவுள்ளது. புதன், சுக்கிரன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வரிசையாக கும்ப ராசிக்குள் நுழைந்து ராகுவுடன் இணையவுள்ளன. இதனால் லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஐந்து வகையான சக்திவாய்ந்த ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகின்றன. இந்த அரிய கிரக மாற்றமானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் தலையெழுத்தையே மாற்றும் அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த யோகங்களால் மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்பம் ஆகிய ஐந்து ராசியினர் பெரும் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இவர்களுக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபமும், உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கைகூடும் என்பதோடு, பொருளாதார நிலைமை பலமடைந்து புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன், மன அழுத்தங்கள் நீங்கி வாழ்வின் உச்சாணிக் கொம்பிற்குச் செல்லும் பொற்காலமாக இது அமையும்.