ஆன்லைன் ஷாப்பிங் செய்றீங்களா…? ‘பார்சல்’ என்ற பெயரில் வங்கிக் கணக்கை குறிவைக்கும் கும்பல்… உஷாரா இருங்க மக்களே…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தைப் பயன்படுத்தி ‘கால் ஃபார்வர்டிங்’ (மூலம் வங்கிக் கணக்கை காலி செய்யும் புதிய மோசடி பரவி வருகிறது. இதில் குற்றவாளிகள் கூரியர் நிறுவன ஊழியர்களைப் போலப் பேசி, பார்சலை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட எண்ணைத் (+21, +401 போன்றவை) டயல் செய்யுமாறு கூறுவார்கள். பயனர் அந்த எண்ணை அழைத்ததும், அவர் மொபைலுக்கு வரும் அனைத்து ரகசிய OTP எண்கள் மற்றும் வங்கி அழைப்புகள் தானாகவே மோசடியாளர்களின் எண்ணிற்குத் திசைதிருப்பப்படும். இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி வங்கியில் இருந்து பணத்தைத் திருடிவிடுவார்கள்.

இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, தெரியாத நபர்கள் கூறும் எண்களை ஒருபோதும் டயல் செய்யாதீர்கள். கூரியர் அல்லது டெலிவரி நிறுவனங்கள் ஒருபோதும் இதுபோன்ற ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தச் சொல்லாது என்பதை உணர வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கவும். மேலும், உடனே உங்கள் வங்கிச் செயலிகளின் கடவுச்சொற்களை மாற்றி, கால் ஃபார்வர்டிங் வசதியை முடக்குவது பாதுகாப்பானது.