நீண்ட இடை வேலைக்கு பிறகு தற்போது அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. அஜித்குமாருடன் திரிஷா அர்ஜுன் சர்ஜா ரெஜினா ஆரவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முதல் நாள் வசூல் இல்லை என்று கூறப்படுகிறது. முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் 22 கோடி தான் வசூலித்திருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் Overseas இல் முதல் ஷோக்கு மட்டும்தான் கூட்டம் இருந்தது அதற்கு அடுத்த ஷோக்களி lல் ஆளே இல்லை என்று விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
விடாமுயற்சி தற்போது ரிலீசுக்கு அடுத்ததாக ஏப்ரல் பத்தாம் தேதி Good Bad Ugly ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது இந்த விடாமுயற்சி படத்திலன் வசூல் குறைந்து இருப்பதால் அடுத்ததாக வெளியாக இருக்கும் Good Bad Ugly ஆன்லைன் ரைட்ஸ் satellite rights போன்றவை குறையும் கூறப்படுகிறது.

எப்போதுமே எவ்ளோ பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களின் முந்தைய படம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதை தொடர்ந்து தான் அடுத்த படத்தின் வியாபாரமும் கணிக்கப்படுகிறது. விடாமுயற்சி படம் தற்போது பின்னடைவு ஏற்பட ஆரம்பித்திருப்பதால் அடுத்ததாக GoodBadUgly மார்க்கெட் விலை குறையும் இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் பாதிக்கப்படுவார் மற்றும் தயாரிப்பாளர்கள் நிலைமை என்னாகும் என்ற பேச்சுக்கள் சினிமா வட்டாரங்களில் நிலவி வருகிறது.
