மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் இங்கு ரிலீசாகி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க தெற்கு ஐரோப்பிய தொடரில் பங்கேற்பதற்காக முதல் சுற்றுக்கான பயிற்சியில் அஜித் தனது கார் ரேஸ் பயிற்சியை தொடங்கியுள்ளார். என்னதான் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பைக் மற்றும் கார் ரேஸ் அஜித்துக்கு தனி ஒரு விருப்பம் உள்ளது என்றுதான் கூற வேண்டும். இப்படியான நிலையில் அகில் திருமேனி அஜித் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், நம் எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அது நம்ம ஏன் அறியாமல் சில நேரங்களில் வெளிப்படும். அப்படித்தான் விடாமுயற்சி படபிடிப்பு நடைபெறும் போது ஒரு காட்சியில் மற்றொருவர் நடிக்க வேண்டும்.
ஆனால் அந்த காட்சியில் நான்தான் நடிப்பேன் என்று அஜித் ரொம்பவே அடம்பிடித்தார். காரணம் அது ஒரு கார் ஓட்டும் சீன். நான் தான் அந்த காரை ஓட்டுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். கார் மற்றும் பைக் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தும் போது அஜித்துக்குள் இருந்து ஒரு குழந்தை தனம் வெளிப்படும். அவருடைய முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் விடாமுயற்சி படபிடிப்புக்காக சில கார் மற்றும் பைக்குகளை வெளியில் லைனாக நிறுத்தி வைத்திருந்தோம்.
அதனைப் பார்த்த அஜித் அதில் ஒரு பைக் தனக்கு ரொம்ப பிடித்து போக அதில் அமர்ந்து கொண்டு ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த பைக்கோட சாவியை எடுத்துட்டு வாங்க நான் இதை ஓட்டி பாக்கணும் என்று சொன்னார். அன்னைக்கு அங்கு புதுசா வந்திருந்த நபர் ஒருவர் அதை என்னோட பைக் தான் ஆனால் இது ஓட்றது ரொம்ப கஷ்டம் இந்தாங்க ஓட்டி பாருங்க என்று சொல்லி சாவியை கொடுத்தார். ஆனால் அந்த நபருக்கு அஜித் எப்படி என்று தெரியாது. அஜித் கார் பைக் மீது ஆர்வம் கொண்டவர் என்று தெரியாமல் அந்த நபர் அஜித்திடம் அப்படி பேசிக் கொண்டிருந்தார் என மகிழ்த்திருமேனி இந்த சம்பவத்தை பகிர்ந்து உள்ளார்.