தங்கத்தின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளான இன்றும் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ரூ.15,775-க்கும், ஒரு சவரன் ரூ.1,800 அதிகரித்து ரூ.1,26,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவதே இந்த அதீத விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் இந்த ஸ்திரமற்ற தன்மையால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் புதிய உச்சங்களைத் தொட வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
