சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 24, 2026) அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமுக்கான விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,890-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.133-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000-க்கும் விற்பனை செய்யப்படுவதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
