இயக்குனர் கஸ்தூரிராஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஒரு தடவை கவுண்டமணி இறந்துட்டாருன்னு நியூஸ் வந்துடுச்சு. கண்டிப்பா அது உண்மையா இருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் நாம எதுக்கும் போன் பண்ணி பாப்போம்ன்னு அவருக்கு போன் பண்ணினேன். போனை எடுத்ததும் நான் கவுண்டர் தான் பேசறேன். உயிரோடுதான் இருக்கேன்னு சொன்னார். இல்லே, உங்கள பத்தி தப்பான நியூஸ் வந்துடுச்சுன்னு சொன்னேன்.
அதுக்கு அவர், எவனோ பொய்யை சொல்லிட்டான். ஊர்ல இருந்து லாரியில் வந்துட்டு இருக்காங்க. இவனுங்களுக்கு வேற நான் இனி சோறாக்கி போடணும்ன்னு கிண்டல் பண்ணினார். அதோட வாயை பொத்திக்கிட்டு இதுக்கு மேல நாம ஏதாவது கேட்டா கலாய்ப்பார் என்று போனை வைத்துவிட்டேன். ரொம்ப வெள்ளந்தியான விசித்திரமான மனுஷன் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா அதில் கூறியிருக்கிறார்.
