ஆபரணத் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் 70 ரூபாய் உயர்ந்து 10,360 ரூபாய்க்கும், சவரன் 560 ரூபாய் உயர்ந்து 82,880 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 83,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
