BREAKING: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,280 சரிவு… சர்வதேச சந்தை மாற்றத்தால் தலைகீழ் மாற்றம்..!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று (மார்ச் 06) அதிரடியாகக் குறைந்து நுகர்வோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.15,120-க்கு விற்ற நிலையில், இன்று ரூ.160 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி நேற்று விற்ற விலையை விட ரூ.5,000 குறைந்து ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இல்லத்தரசிகளும் நகைப்பிரியர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.