#BREAKING: அசாம் போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.. பெரும் சோகம்..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் பகுதியில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டு மாயமான இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானம், மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அணித்தலைவர் (Squadron Leader) அனுஜ் மற்றும் விமானப்படை தளபதி (Flight Lieutenant) பூர்வேஷ் துரக்கர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர், இன்று (மார்ச் 06, 2026) விமானத்தின் பாகங்களைக் கண்டறிந்தனர். விபத்தில் வீரர்களின் உடல் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.