வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 20) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 15 உயர்ந்து, 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ 13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ 120 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,05,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்கத்திலேயே மீண்டும் ஏறுமுகமாக மாறியிருப்பது நடுத்தரக் குடும்பத்தினரையும், வரவிருக்கும் சுபமுகூர்த்த நாட்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
