சென்னையில் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 23, 2026) அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும், ஒரு கிராம் ரூ.14,680-க்கும் விற்பனையானது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,880 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.14,860-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
வெள்ளி விலையும் தங்கத்திற்கு இணையாக இன்று கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.10,000 அதிகரித்து ரூ.3,00,000-ஐ எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வெள்ளி விலை, இன்று மீண்டும் மூன்று லட்சத்தை எட்டி முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
