மாதத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று சரிவுடன் தொடங்கியிருப்பது நடுத்தர மற்றும் இல்லத்தரசிகளுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலை மாற்றங்களின் எதிரொலியாக உள்நாட்டுச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும், ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து 1,05,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்றைய விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
