“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

By Soundarya on ஆனி 4, 2026

Spread the love

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை கணக்கிடும் முறையிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, முப்பது நாள்களின் சராசரி தங்கம் விலை அல்லது அதற்கு முந்தைய நாளின் விலை ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அதையே அடிப்படையாகக் கொண்டு நகைகளின் மதிப்பு இனி கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடமானம் வைக்கப்படும் தங்கம் 24 காரட் தூய்மை கொண்டதாக இருந்தாலும் கூட, அதன் கடன் மதிப்பை 22 காரட் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில்தான் கணக்கிட்டு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று RBI குறிப்பிட்டுக் கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறையானது தங்கம் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து வங்கிகளைப் பாதுகாக்கவும், கடன் வழங்கும் செயல்முறையை முறைப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.