துபாயை விட தங்கம் மலிவாக கிடைக்குமாம்…! எங்கு தெரியுமா…? ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு….!!

Spread the love

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா அல்லது உயருமா என்ற சந்தேகத்தில் பலர் உள்ளனர்.

இந்திய பயணிகள் துபாயில் இருந்து தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஏனெனில் அங்கு தங்கம் மலிவாகக் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். உலகிலேயே மலிவான தங்கம் துபாயில் கிடைக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் துபாயை விட பூட்டானில் தங்கம் மலிவாகக் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

பூட்டானில் உள்ள வரி இல்லாத கடைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி இல்லாத தங்கத்தை வழங்குகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பூட்டான் அரசு இந்த வசதியை அளிக்கிறது. ஆனால் இது திம்பு மற்றும் பரோ போன்ற நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட வரி இல்லாத கடைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பூட்டானில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்ற நாடுகளை விட குறைவு. இருப்பினும் உலகிலேயே மலிவான விலை என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இறக்குமதி வரிகள் இன்னும் குறைவு.

ஒரு இந்திய குடிமகன் பூட்டானில் இருந்து தங்கம் வாங்கி இந்தியாவுக்கு கொண்டு வர விரும்பினால், ஆண்கள் 20 கிராம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம். பெண்கள் 40 கிராம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம். அதிகப்படியான தங்கத்தை கொண்டு வருவது சட்டவிரோதம் இல்லை. ஆனால் இந்திய சுங்கச் சட்டப்படி அதிகப்படியான தங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாமல் 20 முதல் 40 கிராமுக்கு மேல் கொண்டு வருவது சட்டவிரோதமாகக் கருதப்படலாம். இதற்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம்.

தங்கம் வாங்க பூட்டான் அரசு ஒரு சிறப்பு நிபந்தனை விதித்துள்ளது. வெளிநாட்டினர் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் குறைந்தது ஒரு இரவு தங்க வேண்டும். ஹோட்டல் தங்கும் நிபந்தனையை பூர்த்தி செய்த பின்னரே தங்கம் வாங்க முடியும். குறைந்த விலை மற்றும் வரி இல்லாத சந்தை காரணமாக பூட்டான் இப்போது தங்கம் வாங்குவதற்கான பிரபலமான புதிய இடமாக மாறி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

4 minutes ago

“அடி தாங்க மாட்டீங்க”… சவால் விட்ட மாணிக்கம் தாகூர்… “நீங்க இன்னும் ICU-ல தான் இருக்கீங்க”… கிழித்துத் தொங்கவிட்ட திமுக எழிலரசன்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…

5 minutes ago

BREAKING:பரபரப்பின் உச்சக்கட்டம்… நீதிமன்ற வாசலில் அனிதா ராதாகிருஷ்ணன் வீசிய ‘அரசியல் குண்டு’…6 மணி நேரம் விசாரனைக்கு பின் நடந்த ட்விஸ்ட்…!

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம்…

8 minutes ago

“அண்ணா சினிமாவுக்கு என்ன செய்யப்போறீங்க…?” – விஜய்யை நேரில் சந்தித்து கேள்வி கேட்கத் துடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…!

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு மற்றும் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, நெட்டிசன்களின் கடுமையான…

12 minutes ago

மரண பயம் காட்டும் CCTV காட்சி… சுங்கச்சாவடியை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிய கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…

19 minutes ago