தங்கத்தின் விளையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 700 ரூபாய் அளவில் உள்ள நிலையில் இலையில் இருந்து தங்கம் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒளலு பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் புவியியல் ஆய்வாளர்களால் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள லாப்லாண்ட் காட்டில் உள்ள நார்வே மரங்களில் இலைகளில் இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளார்கள். கிட்டிலா தங்க சுரங்கத்திற்கு அருகே உள்ள 23 நார்வே ஸ்ப்ரூப்ஸ் மரங்களில் 138 இலைகளை சேகரித்து அதை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி வைத்து ஆய்வு செய்துள்ளார்கள்.
அதில் நான்கு மரங்களின் இலைகளில் நுனியில் நானோ அளவிலான தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மரங்களில் உள்ள பாக்டீரியா குழுக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மண்ணில் திரவ வடிவில் உள்ள தங்கம் வேர் மூலமாக மரத்திற்குள் நுழைந்து இலைக்குள் செல்கிறது. இந்த இலைகளில் பாக்டீரியா குழுக்கள் இதை திட வடிவ தங்கமாக மாற்றுவது தெரியவந்துள்ளது . இது வணிக ரீதியாக லாபம் அளிக்காது என்றாலும் தங்க சுரங்கங்களை தோண்டுவதற்கு முன்பு அங்குள்ள இலைகளில் ஆய்வு செய்வதன் மூலம் தங்கம் இருப்பதை கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பந்த்லகுடா பகுதியில் உள்ள ஒயின் ஷாப் அருகே 34 வயதான முகமது நயீம் என்ற ரியல்…
"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.…
திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர்…
லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக, அவர் தங்கியுள்ள தேம்ஸ் நதிக்கரை ஓட்டல் எதிரே ஏராளமான தமிழக ரசிகர்கள்…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில்…