ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…! மலிவு விலையில், தங்கம் வெள்ளி விற்பனை…? முதல்வருக்கு வந்த மனு…!!

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

தமிழகத்தில் தங்கத்தின் விலை தற்போது சவரன் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சுப காரியங்களுக்கு நகை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏழை எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, ரேஷன் கடைகள் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று ‘தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கம்’ சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை தினமும் மாறுபடுவதால் ரேஷன் கடைகளில் நேரடியாக விற்பனை செய்வது அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த எடையுள்ள நகைகளைத் தவணை முறையில் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.