‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ராஜகுமாரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார். இன்றைய தலைமுறையினருக்குப் பிரபல நடிகை தேவயானியின் கணவராக மட்டுமே தான் அடையாளப்படுத்தப்படுவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். தேவயானியைத் திருமணம் செய்த பிறகு, திரையுலகில் ஒரு இயக்குநராகத் தனக்கிருந்த தனிப்பட்ட அங்கீகாரம் மறைந்து போனதாக கூறியுள்ளார்.
தான் யாரிடமாவது புதிய கதைகளைச் சொல்லச் சென்றாலும், அங்குத் தன்னை ஒரு படைப்பாளியாகப் பார்க்காமல் ‘தேவயானியின் கணவர்’ என்ற பிம்பமே மேலோங்கி நிற்பதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த அடையாளச் சிக்கல் காரணமாகவே பல நல்ல சினிமா வாய்ப்புகளைத் தான் இழக்க நேரிட்டதாகவும், இதனாலேயே தற்போது யாரிடமும் கதை சொல்லச் செல்வதில்லை என்றும் அவர் எமோஷனலாகப் பேசியுள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
