Categories: சினிமா

விஜய்க்கு பண்ண விஷயத்தை உடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் செய்ய ஆசைப்படும் வெங்கட் பிரபு.. அப்போ இப்போதைக்கு முடியாது போலயே..!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரையில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயை இளமையாக காட்ட அமெரிக்காவில் தனி தொழில்நுட்ப குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் விஜய் அமெரிக்காவிற்கு சென்று வந்தார். படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் அப்பா விஜயும், மகன் விஜயையும் மோதி கொள்ளும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய வில்லனான மைக் மோகனும் விஜயும் நேரடியாக மோதிக் கொள்ளும் காட்சிகளும் இடம் பெறுகிறது.

வருகிற 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் ஆகும். மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இடம் பெறும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் De-aging தொழில்நுட்ப வேலைகளை வருகிற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிக்குள் முடித்து தருவதாக தொழில்நுட்ப குழுவினர் கூறியிருந்தனர். படத்தில் விஜய் மட்டும் இல்லாமல் அவருடன் நடிக்கும் நண்பர்களையும் De-aging தொழில்நுட்பம் மூலம் மாற்ற வேண்டிய வேலை உள்ளது.

தொழில்நுட்பக் குழுவினர் பத்தாம் தேதிக்குள் வேலையை முடித்து தருவதாக கூறியிருந்த நிலையில் தற்போது மேலும் 10 நாட்கள் தேவைப்படும் என கூறுகிறார்களாம். இதனால் வெங்கட் பிரபு என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்தில் உள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டனர். அப்படி இருக்க De-aging தொழில்நுட்பம் தாமதம் ஆனால் அடுத்த கட்ட பணிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

admin

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

2 seconds ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

5 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

11 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

14 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

18 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

22 minutes ago