என்னது, GOAT படம் இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா…!உறுதிப்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு.

By Ranjith Kumar on பங்குனி 5, 2024

Spread the love

கோட் ( greatest of all time) படம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் வெங்கட் பிரபு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தினி அப்டேட் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். கோட் படம் ஹாலிவுட்டில் வெளியாகிய மிகப் பிரபலமான ஜெமினி மேன் படத்தின் ரீமேகா என்று கேட்ட கேள்விக்கு, வெங்கட் பிரபு அதைப்பற்றி சற்று விரிவாக பேசி உள்ளார். லியோ பட வெற்றிக்குப் பின் இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் அவர்களும் கூட்டணி சேர்ந்து கோட் ( greatest of all time) படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் 20 வருடங்களுக்குப் பின் விஜயுடன் யுவன் சங்கர் ராஜா அவர்கள் கூட்டணி இணைந்திருக்கிறார்கள். இதைக் கண்ட மக்கள் மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். கோட்படத்தில் விஜய் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, வி.டி.வி கணேஷ் போன்ற பன்முகம் கொண்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் விஜய் அவர்கள் டபுள் ஆக்சன் ரோலில் நடித்து வருகிறார். ஒரு கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க CG, VFX வைத்து விஜய் அவர்களின் பையன் கதாபாத்திரத்தை குளோனிங் செய்து இயக்கி வருகிறார்கள்.

   

விஜயின் சிறு வயது கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க தத்துவமாக VFX மூலம் மிகப் புதுமையாக விஜய் அவர்களே இப்படத்தில் காட்ட உள்ளதாக வெங்கட் பிரபு அவர்கள் தெரிவித்து இருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொழுது படங்களை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு பத்திரிகையாளர் வெங்கட் பிரபுவிடம் இப்படம் ஹாலிவுட் 2019 ஆம் ஆண்டு “வில் ஸ்மித்” நடிப்பில் வெளியாகி மிகப் பிரபலமாக ஓடிய “ஜெமினி மேன்” படத்தின் ரீமேகா என்று கேட்டுள்ளார்கள்,

   

அதற்கு வெங்கட் பிரபு அவர்கள் இப்படம் எந்த படத்தின் ரீமேக் இல்லை, முழுக்க முழுக்க மிகப் புதுமையான கதை, இதுவரையும் எந்த சினிமாவிலும் இப்படம் வந்தது இல்லை, ஆனால் ஜெமினி மேன் படத்தில் வருவது போல் இரண்டு கதாபாத்திரங்கள் மூலமாக விஜயை வெளிப்படுத்துகிறோம் அவ்வளவுதான் என்றும், வேற எந்த படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது முழுக்க முழுக்க பிரஷ் கான்செப்ட் என்று வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.