சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிர்லா போஸ். சின்னத்திரையில் நடிக்க வருவதற்கு முன்பே ‘ராம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பின்பு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் காவியா வர்ஷினி, பாரதி கண்ணம்மா, ஆதிபராசக்தி, எங்கள் வீட்டுப் பெண், வள்ளி, திருமதி செல்வம், கல்யாண பரிசு, சந்திரலேகா, கோலங்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் என்றாலே பலரும் பிர்லா போசை தான் பரிந்துரைப்பார்கள். இதனால் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் திருமதி செல்வம், கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ள இவர் ,தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தங்கமகள்’ எனும் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பார்க்கிங் படத்தில் வந்தது போல், நடிகர் பிர்லா போஸ் மற்றும் அவரது கீழ் வீட்டு காரர் இடையே காரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர் தனது குடும்பத்துடன் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், பிர்லா போஸ் காரை இடித்துவிட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாம். இந்த பிரச்சனையால் அந்த இளைஞர், பிர்லா போஸை பழிவாங்க வேண்டும் என நினைத்து, அவருடைய மகனை கடத்த முடிவு செய்துள்ளார். பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக, 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்த, பிர்லா போஸ் மகனை கடத்தி சரமாரியாக அடித்துள்ளனர் என கூறப்படுகிறது.

பின் எந்த வித சந்தேகமும் வராத வண்ணம், பிர்லா போஸ் மகனை அவரது வீட்டிலேயே இறக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்து மகனை பார்க்க பதறியடித்து ஓடி வந்துள்ளார் பிர்லா போஸ். மருத்துவ சிகிச்சைக்கு பின், இப்படி செய்தது கீழ் வீட்டில் இருக்கும் இளைஞர் தான் என தெரியவந்த நிலையில், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பிர்லா போஸ். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை தற்பொழுது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
