இந்தியாவில் மதுபான விலைகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். முக்கிய காரணம் கலால் வரி. இதை ஒவ்வொரு மாநில அரசும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கும். கலால் வரி என்பது மதுபானம், பீர், ஒயின் போன்றவற்றுக்கு மாநில அரசு விதிக்கும் வரி. இதன் மூலம் பெரும் வருவாய் கிடைக்கும். மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுலா கொள்கைக்கு ஏற்ப வரி விகிதம் மாறும்.
சில மாநிலங்கள் வரியை அதிகமாக வைத்து விலையை உயர்த்தும். சில மாநிலங்கள் சுற்றுலாவை ஊக்குவிக்க குறைவாக வைக்கும். கோவாவில் மதுபானம் மிக மலிவு. கலால் வரி 49% மட்டுமே. பீர், ஒயின் மற்ற மாநிலங்களை விட கோவாவில் விலை குறைவு. ஹரியானாவில் வரி 47%. குருகிராம், ஃபரிதாபாத் போன்ற இடங்களில் டெல்லி, பஞ்சாபை விட விலை குறைவு தான்.
டெல்லியில் வரி 62%. உத்தரபிரதேசம் 66%. எனவே டெல்லி மலிவு. சிக்கிம், டாமன் & டையூ, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களிலும் விலை குறைவு. கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் வரி அதிகம். கோவா, புதுச்சேரியில் விலை குறைவு என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வாங்குவர்.
மாநிலங்களுக்கு இடையே விதிகளை மீறி மதுபானம் கொண்டு செல்வது சட்டவிரோதம். அபராதம் அல்லது தண்டனை கிடைக்கலாம். ஒவ்வொரு மாநிலமும் தனி விதிகள் கொண்டுள்ளது. கொண்டு செல்வதற்கு முன் விதிகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
